ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஆண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தஜிந்தர்பால் சிங் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 18வது ஆசிய விளையாட்டில் இந்தியா வென்றுள்ள ஏழாவது தங்கம் இதுவாகும்.
ஸ்குவாஷ் போட்டிகளில் தீபிகா பல்லிகல் மலேசியாவின் நிகோல் டேவிட்டிடமும், ஜோஸ்னா சின்னப்பா, மலேசியாவின் சிவசங்கரி சுப்ரமணியத்திடமும் தோல்வியடைந்தனர். 2014 ஆசிய போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஸ்குவாஷில் வெள்ளி வென்ற சௌரவ் கோஷால், அரையிறுதியில் ஹாங்காங்கின் சங் மிங் ஆவிடம் தோல்வியுற்றார்.
 
தீபிகா பல்லிகல், ஜோஸ்னா சின்னப்பா மற்றும் சௌரவ் கோஷால் ஆகியோர் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். 
 
ஏழாவது நாளில் 7 தங்கம், 5 வெள்ளி மற்றும் 17 வெண்கலத்தோடு மொத்தம் 29 பதக்கங்கள் பெற்று இந்தியா பதக்கப் பட்டியலில் எட்டாவது இடத்தில் தொடருகிறது.

You'r reading ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: குண்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இறுதிச்சுற்றில் மின்னசோட்டா டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டி: 8 அணிகள் களத்தில்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்