சென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா:nbspலுங்கி டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்த பி.வி.சிந்து

சென்னை: சென்னை ஸ்மாசர்ஸ் பேட்மிண்டன் அணி வீரர்களுக்கான சீருடை அறிமுக விழாவில் லுங்கி டான்ஸ் பாடலுக்கு பி.வி.சிந்து லுங்கி அணிந்து நடனம் ஆடிய காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

ப்ரீமியர் பேட்மின்டன் லீக்கின் 3வது தொடர் நாளை தொடங்கி ஜனவரி 14ம் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் சீருடை அறிமுகப்படுத்தும் விழா சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகனும் சென்னை ஸ்மாசர்ஸ் அணியின் உரிமையாளருமான விஜய பிரபாகர், அணியில் இடம்பெற்றுள்ள பி.வி.சிந்து, கிரிஸ் அட்காக், கேபி அட்காக் உள்ளிட்ட வீரர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் கலை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பி.வி.சிந்து லுங்கி டான்ஸ் பாடலுக்கு விஜய பிரபாகருடன் சேர்ந்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இதன் பின்னர், விழாவில் பேசிய பி.வி.சிந்து,” எனது ஆட்டமுறை சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. எனக்கு சென்னை அணியை மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு போட்டிகளுக்காக சிறப்பான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கோப்பையை வெல்வோம்” என்றார்.

You'r reading சென்னை ஸ்மாசர்ஸ் சீருடை அறிமுக விழா:nbspலுங்கி டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்த பி.வி.சிந்து Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விராட் -அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்