ஆசிய கோப்பை... இந்தியாவை சமாளிக்குமா ஹாங்காங்!

இந்தியாவை சமாளிக்குமா ஹாங்காங்

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில், இன்று மாலை 5 மணிக்கு இந்திய அணியை எதிர்கொள்கிறது அறிமுக அணியான ஹாங்காங். முன்னதாக பாகிஸ்தானிடம் பஞ்சர் ஆன ஹாங்காங் பலம் பொருந்திய இந்திய அணியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே அந்நாட்டு ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ள்து.

அதே சமயம் இந்தியாவிற்கோ, அடுத்து நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கான பயிற்சி ஆட்டமாக இது அமையும் வாய்ப்புள்ளதால், இந்திய வீரர்கள் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பாகிஸ்தான் அணியை போலவே அதிக ரன்கள் வித்தியாசத்தில், இந்தியா ஹாங்காங்கை வீழ்த்த வேண்டும் என்பதே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆதங்கம்.

முதல் போட்டியை இழந்த ஹாங்காங் அணி தங்களை தொடரில் தக்க வைத்துக் கொள்ள புதிய யுக்திகளை கையாள்வார்கள். கேப்டன் கோலி இல்லாதது அவர்களுக்கு சாதகமான ஒன்று. ஆனால், அதே சமயம் தோனியின் வழிகாட்டுதல் மற்றும் ரோகித் ஷர்மாவின் அதிரடி அவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே அமையும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஹாங்காங் அணி:

நிஜகாத் கான், கேப்டன் அனுஷ்மான் ராத் (கேப்டன்), பாபர் ஹயாத், கிறிஸ்டோபர் கார்ட்டர், கின்சித் ஷா, இஷான் கான், அய்ஜாஸ் கான், ஸ்காட் மெக்கெச்னி (வி.கீ), தன்வீர் அப்சல், இஷான் நவாஸ், நதிம் அகமது, கேமரான் மெக் ஆல்சன், அர்ஷத் முகமது, ராக் கபூர், தன்வீர் அகமது, வாக்கஸ் கான், அப்தப் ஹுசைன்.

இந்திய அணி:

ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், மணிஷ் பாண்டே, எம்.எஸ். தோனி(வி.கீ), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், கலீல் அகமது, அக்ஸார் பட்டேல், ஷர்துல் தாக்குர், ஜஸ்ப்ரித் பும்ரா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ்.

You'r reading ஆசிய கோப்பை... இந்தியாவை சமாளிக்குமா ஹாங்காங்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சிக்கன நடவடிக்கை எதிரொலி: ஆடம்பர கார்களை ஏலம்விட்டது பாகிஸ்தான் அரசு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்