லிவிங் டுகெதர் காதலியை நிச்சயம் செய்தார் ரொனால்டோ!

Ronaldo gets engaged to girlfriend Georgina Rodriguez

கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியனோ ரொனால்டோ தனது காதலியை மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துள்ளார்.

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியனோ ரொனால்டோ, இரண்டு ஆண்டுகளாக லிவிங் டுகெதரில் வாழ்க்கையை நடத்தி வரும் தனது காதலி ஜியார்ஜினா ரோட்ரிகஸை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார். அதற்கு அச்சாரமாக இருவரும் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துள்ளனர்.

ரொனால்டோ மற்றும் ரோட்ரிகஸ் ஜோடி கடந்த இரு ஆண்டுகளாக இத்தாலியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அலானா மார்டினா எனும் ஒரு வயது மகளும் இருக்கிறாள்.

லண்டனில் உள்ள ஜெலா ஹோட்டலில் ரொமாண்டிக் இரவு விருந்தில் இருவரும் சமீபத்தில் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருவரது கைகளிலும் கார்ட்டியர் வகை வைர மோதிரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் இருவரும் நிச்சயம் செய்து கொண்டதும் விரைவில் திருமணத்துக்கு தயாராகி வருவதும் தெளிவாகியுள்ளது.

You'r reading லிவிங் டுகெதர் காதலியை நிச்சயம் செய்தார் ரொனால்டோ! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 'சர்கார்’ படத்தில் இந்து கடவுளுக்கு அவமரியாதை- மலேசியாவில் போர்க்கொடி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்