உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் அசத்தல்!

mary kom 6th time won gold

உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறை தங்கப் பதக்கத்தை கைப்பற்றி புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார் மேரி கோம்.

பெண்களுக்கான உலக கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மேரி கோம் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் உக்ரைன் வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இது இந்தியாவில் இவர் பெரும் 2வது தங்கப் பதக்கம். மற்ற 4 பதக்கங்களை வெளிநாடுகளில் மேரி கோம் வாங்கியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

 அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார்.

இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

You'r reading உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் அசத்தல்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மின்சாரம் பாய்ந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த மின் ஊழியர் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்