3-வது டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

3rd T20: Australia put 165-run target for Indi

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் ஆரோன் பிஞ்ச், ஷார்ட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் இந்திய வீரர்களை பந்துகளை சரமாரியாக வெளுத்து வாங்கினர். 8.3 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்த நிலையில் ஆரோன் பிஞ்ச் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த 4 ஓவர்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை குருணால் பாண்டியா கைப்பற்றி ஆஸ்திரேலியா அணியை அதிர்ச்சி அடைய வைத்தார். ஷார்ட் 33, மேக்ஸ்வெல் 13, பென் மெக்டெர்மோட் டக்அவுட் என அதகளப்படுத்தினார் பாண்டியா.

90 ரன்களுக்குள் 4 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது ஆஸ்திரேலியா. இந்தியா வெல்ல 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டட்ஜி/

ரோகித் சர்மா, ஷிகர் தவான் தொடக்க வீரர்களாக இறங்கினர். இந்த ஜோடி 50 ரன்களை கடந்தது. ஸ்கோர் 67 என்ற நிலையில் தவான் 41 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின்னர் ரோகித் சர்மாவும் 23 ரன்களில் அவுட் ஆனார்.

இதனைத் தொடர்ந்து அதிரடி காட்டி கோலி 34 பந்தில் அரை சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இன்றைய வெற்றி மூலம் டி20 தொடரை இந்தியா 1 - 1 என சமன் செய்துள்ளது.

 

You'r reading 3-வது டி 20 கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி ஊழல்- அமைச்சர்களை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும்: ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்