பெர்த் டெஸ்ட் தோல்வி! கோஹ்லியின் தவறான முடிவு தான் காரணமா?

Is Kohli wrong decision reason for Perth Test fails

பெர்த் டெஸ்ட் தோல்விக்கு முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இன்றி 4 வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி கோஹ்லி தவறான முடிவு எடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெர்த் டெஸ்டில் இந்தியா 2-வது இன்ன்ங்சில் 140 ரன்களில் சுருண்டு 146 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்கு கேப்டன் கோலியின் தவறான கணிப்பே காரணம். பெர்த் ஆடுகளம் வேகப்பந்துக்கு சாதகமானது.

எனவே காயம் பட்டிருந்த முன்னணி சுழல்பந்து வீரர் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவை களமிறக்காமல் 4 வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும் முடிவை கோஹ்லி எடுத்து களமிறங்கினார். ஆனால் சுழற்பந்து வீச்சாளர் இல்லாத குறை முதல் நாள் ஆட்டத்திலேயே வெளிப்பட்டு விட்டது.இந்திய வேகப்பந்து வீரர்கள் பந்து வீசி சோர்வடைந்ததால் ஆஸ்திரேலியா வீரர்கள் ரன் குவித்தனர். இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸி.சுழல் மன்னன் லியானிடம் இந்திய வீரர்கள் சரணடைந்தனர்.

முதல் இன்ன்ங்சில் 5 விக்கெட் வீழ்த்திய லியான் இரண்டாவது இன்னிங்சிலும் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். எனவே இந்த டெஸ்டில் இந்திய சுழல் வீரர் ஜடேஜாவை களமிறக்காதது கோஹ்லி செய்த மாபெரும் தவறு என்ற குற்றச்சாட்டு எழுந்து சர்ச்சையாகி உள்ளது. ஆட்ட முடிவில் இதனை கோஹ்லியும் ஒப்புக் கொண்டார். பெர்த் ஆட்டக்களம் வேகப் பந்துக்கு சாதகமானது என்பதால் பெரும் நம்பிக்கையில் எடுத்த முடிவு தவறாகிவிட்டது என்று கோஹ்லி தெரிவித்தார்.

You'r reading பெர்த் டெஸ்ட் தோல்வி! கோஹ்லியின் தவறான முடிவு தான் காரணமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெர்த் டெஸ்ட்: இந்திய அணியை பழி தீர்த்தது ஆஸ்திரேலிய அணி!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்