மெல்போர்ன் டெஸ்ட் : மழை மிரட்டலுக்கு இடையே வெற்றியை ருசித்தது இந்தியா!

India beat Australia by 137 runs


மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றியை ருசித்தது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. மெல்போர்னில் நடைபெறும் 3-வது போட்டியில் வெற்றிக்கு 399 ரன்கள் தேவை என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சில் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி.அணி 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி நாளில் ஆஸி.அணி வெற்றி பெற 141 ரன்களும், இந்திய அணி வெற்றி பெற 2 விக்கெட்கள் மட்டுமே தேவைப்பட்டது. இன்று காலையில் இந்திய அணியின் வெற்றியை சோதிக்கும வகையில் மழை பெய்ததால் ஆட்டம் துவங்குவது தடைப்பட்டது.

உணவு இடைவேளைக்குப் பின் மழை நின்று ஆட்டம் தொடங்க 3 ரன்கள் சேர்த்த நிலையில் ஆஸ்திரேலியா 261 ரன்களுக்கு ஆன் அவுட்டானது. இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்ற இந்தியா பார்டர்- கவாஸ்கர் கோப்பையையும் தன் வசம் தக்க வைத்துக் கொண்டது. இந்திய தரப்பில் அபாரமாக பந்து வீசி இரு இன்னிங்சிலும் மொத்தம் 9 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

You'r reading மெல்போர்ன் டெஸ்ட் : மழை மிரட்டலுக்கு இடையே வெற்றியை ருசித்தது இந்தியா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அபிராமி மெகாமால் மற்றும் திரையரங்குகளுக்கு விரைவில் மூடுவிழா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்