ஸ்டாலினுடன் முரண்பாடு இல்லை....ஃபேஸ்புக்கில் தீயா பதிவிடும் பொன்முடி!

Ponmudi busy in Facebook

திமுக தலைவர் ஸ்டாலினுடன் எந்த முரண்பாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சோசியல் மீடியாக்கள் தீவிரமாக பதிவிட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் பொன் முடி.

திமுகவில் பொன்முடி ஒதுக்கப்படுகிறார் என நாம் முதலில் செய்தி வெளியிட்டிருந்தோம். பிற நாளிதழ்கள் இதை அடிப்படையாக வைத்து செய்திகளாக வெளியிட்டன.

இதற்கு பதிலளித்து முரசொலியில் பொன்முடி அறிக்கை ஒன்று வெளியானது. நாம் பதிவு செய்தபடி அவர் கேரளாவுக்கு சென்றதையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாலினுடன் தமக்கு முரண்பாடு எதுவும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தும் இருந்தார். இதனைத் தொடர்ந்து தாம் பங்கேற்கும் அத்தனை நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் ஃபேஸ்புக் பக்கத்தில் இடைவிடாமல் பதிவிட்டு வருகிறார் பொன்முடி.

இன்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தாம் பங்கேற்ற நிகழ்வுகளையும் ஆடியோ, வீடியோ சகிதமாக தம் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற வைத்திருக்கிறார் பொன் முடிவு.

You'r reading ஸ்டாலினுடன் முரண்பாடு இல்லை....ஃபேஸ்புக்கில் தீயா பதிவிடும் பொன்முடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதுதான் சிம்பு..! வீடியோ பார்த்து மார்தட்டிக் கொள்ளும் மகத்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்