ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு காளைகளுக்கு வணக்கம்! #Jallikattu

MK Stalin greets Jallikattu Participants

பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:

உழவுச் சமூகத்தில் மனிதனும் உயிர் தான். மாடும் உயிர் தான்.

தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை முன்னிட்டு நடந்த #Jallikattu போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், வென்ற வீரர்களுக்கும் பாராட்டுகள்.

சிறப்பான காளைகளாக தேர்வு செய்யப்பட்ட காளைகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

You'r reading ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு காளைகளுக்கு வணக்கம்! #Jallikattu Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கர்நாடகாவில் பாஜகவின் ’ஆபரேசன் தாமரை 2.O’வுக்கு காங். ஆப்பு? அடக்கி வாசிக்க டெல்லி அட்வைஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்