அதிமுக- அமமுக இணைப்பா? நெவர்... நெவர்... தினகரன் திட்டவட்டம்!

AIADMK-AMMK Connection? Never Never...Dinakaran Precisely!

அதிமுகவுடன் இணைவதா? வாய்ப்பே இல்லை என கதவை மூடிய தினகரன்! அதிமுகவுடன் மீண்டும் இணையப் போவதில்லை என தினகரன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது பாஜக . தினகரனின் அமமுகவையும் அதிமுகவுடன் ஒன்று சேர்த்துவிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்றும் பாஜக நம்புகிறது. இதற்கான முயற்சிகளிலும் பாஜக இறங்கி விட்டது. இதனைத் தான் நேற்று புதுச்சேரியில் பாஜக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயும் கூறியிருந்தார்.தினகரன் என்னுடைய நெருங்கிய நண்பர்.

அதிமுகவில் அவரையும் இணைக்க முயற்சி மேற்கொள்வதாக கூறியிருந்தார். ஆனால் அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. மீண்டும் அதிமுகவில் இணைய மாட்டோம். அப்படி எந்த விருப்பமும் இல்லை என்று பாஜக இணைப்பு முயற்சிக்கு ஒரேயடியாக நோ சொல்லிவிட்டார் தினகரன். பாஜகவின் இணைப்பு முயற்சியை ஆளும் அதிமுக தரப்பிலும் ரசிக்கவில்லை என்றே தெரிகிறது. ராம்தாஸ் அத்வாலேயின் கருத்து அவருடைய சொந்தக் கருத்து என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறிவிட்டு நழுவியுள்ளார்.

You'r reading அதிமுக- அமமுக இணைப்பா? நெவர்... நெவர்... தினகரன் திட்டவட்டம்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நேப்பியர் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணியை 157 ரன்களில் சுருட்டியது இந்தியா.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்