கம்யூ. தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சிய போன் உரையாடலை எடப்பாடி அரசு பதிவு செய்துள்ளது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் புது சர்ச்சை

Communist. Edappadi government has record phone conversation with the leaders of Stalin: New controversy by Dindigul Srinivasans speech

திமுக தலைவர் ஸ்டாலின் போன் டேப் செய்யப்படுவதை ஒப்புக் கொள்வது போல அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொதுக்கூட்டங்களில் திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது ஒவ்வொன்றும் சர்ச்சையாகத்தான் இருக்கிறது. எதைப் பேசினாலும் அர்த்தமின்றி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது அவருக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போது திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதும் சர்ச்சையாகி இருக்கிறது. அக்கூட்டத்தில் பேசிய சீனிவாசன், தேர்தலை கண்டு பயம் இல்லை என்கிறார் ஸ்டாலின்.

ஆனால் ஸ்டாலின் தான் திருவாரூர் இடைத்தேர்தலை திட்டமிட்டு நிறுத்தினார். இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதால் கூட்டணிக்காக கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சினார்.

இதை அரசு பதிவு செய்து வைத்திருக்கிறது. அந்த ஆடியோ என்னிடம் இருக்கிறது.

இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

You'r reading கம்யூ. தலைவர்களிடம் ஸ்டாலின் கெஞ்சிய போன் உரையாடலை எடப்பாடி அரசு பதிவு செய்துள்ளது: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் புது சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதெப்படி சிவகுமார சுவாமிஜிக்கு பத்ம விருது கொடுக்காமல் விடலாம்? மல்லிகார்ஜுன கார்கே கொந்தளிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்