சஸ்பென்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளது - பள்ளிக் கல்வித் துறை அதிரடி!

The workspace is empty suspended 450 teachers - Department of School Education in Action!

போராட்டத்தில் ஈடுபட்டதால் சஸ்பென்ட் ஆன 450 ஆசிரியர்களின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிாடி உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம் 7-வது நாளாக நீடிக்கிறது. போராட்டத்தை ஒடுக்க சங்க நிர்வாகிகள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் 450 பேர் மீது சஸ்பென்ட் நடவடிக்கையும் பாய்ந்தது.

இந்நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை . போராட்டத்தில் பங்கேற்காமல் பணிக்கு வரும் ஆசிரியர்கள் இந்த இடங்களுக்கு பணியிட மாறுதல் வேண்டி விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணியில் சேர்க்கப்பட உள்ளதாகவும், இன்று மாலை வரை போராடும் ஆசிரியர்களுக்கு பணிக்குத் திரும்ப அவகாசம் வழங்கப் பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

You'r reading சஸ்பென்ட் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களின் பணியிடம் காலியாக உள்ளது - பள்ளிக் கல்வித் துறை அதிரடி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இலங்கை கடற்படையால் மீண்டும் 4 தமிழக மீனவர்கள் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்