மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் மீது பாசம் காட்டிய மோடி- குஷியில் பாஜக தலைகள்!

PM Modis signal to OPS

மோடியின் வருகையால் அதிமுக கூடாரத்துக்குள் பெரிதாக எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பெரிதாக வேகம் எடுக்கவில்லை.

'இந்தமுறை எடப்பாடி பழனிசாமி வகையறாக்களை மோடி அடக்கிவிடுவார்' என தமிழிசையும் பொன்னாரும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் எதைப் பற்றியும் பேசாமல் மோடி கிளம்பிவிட்டார்.

விமான நிலையத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்கும்போது, பன்னீர்செல்வம் ஒதுங்கியே நின்றிருந்தார். அவரையும் பக்கத்தில் அழைத்து நிற்க வைத்தார் மோடி.

இதைப் பற்றிப் பேசும் அதிமுகவினர், தர்மயுத்தத்துக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த பாசத்தை இப்போதும் பாஜக மீது காட்டுகிறார் பன்னீர். கூட்டணியே வேண்டாம் என அதிமுகவினர் கடுகடுத்தபோதும், மோடி தலைமையை ஏற்க வேண்டும் எனப் பேசி வருகிறார் ஓபிஎஸ்.

இந்தக் கருத்தில் தர்மயுத்தத்தில் ஈடுபட்ட சிலரும் உறுதியாக உள்ளனர். ' எடப்பாடியை நம்ப முடியாது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீரை நம்பலாம்' என தமிழக பாஜக தலைகள் நினைக்கிறார்கள்.

இதை டெல்லிக்கும் தெரியப்படுத்தியுள்ளனர். அதனால்தான் விமான நிலையத்தில் பன்னீரை தன்பக்கம் வரச் சொன்னார்' என்கிறார்கள்.

-அருள் திலீபன்

You'r reading மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் மீது பாசம் காட்டிய மோடி- குஷியில் பாஜக தலைகள்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - யாருக்கு எத்தனை சீட்? திமுகவில் கலகத்தை தொடங்கிய துரைமுருகன்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்