நெருங்குது தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு.. குலைநடுக்கத்தில் ஓபிஎஸ்.. டெல்லிக்கு தூது மேல் தூது!

OPS camp worry over Disqualification Case Verdict

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

'இந்தத் தீர்ப்பு வரும்போது ஆட்சி கவிழ்ந்துவிடும். இதை நான் சொன்னால் ஏதோ கனவில் மிதப்பதாகச் சொல்கிறார்கள். இந்த ஆட்சி நீடிக்கப் போவதில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார் ஸ்டாலின். 18 பேர் வழக்கின் தீர்ப்பைப் போலவே, பன்னீருக்கு எதிரான மிக முக்கியமான அஸ்திரமாக இதைப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.

தன்னுடைய எம்எல்ஏ பதவிக்கும் துணை முதல்வர் பதவிக்கும் ஆபத்து வர இருப்பதை அறிந்துதான் தலைமைச் செயலகத்தில் அதிகாலை யாகம் நடத்தினார். ' மத்திய அரசு நினைத்தால் இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றலாம்' என்பதை அறிந்து சங்கர மடம் மூலமாகவும் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாகவும் தூது அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

இதை அறிந்து சங்கர மடத்தைக் கடுமையாக எச்சரித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. மோடியின் தமிழக விசிட்டிலும் தன்னுடைய விசுவாசத்தைக் காட்ட நினைத்தார் ஓபிஎஸ். இந்தக் காட்சிகளை எல்லாம் உளவுத்துறை மூலமாக குறிப்பெடுத்து வைத்திருக்கிறாராம் ஈபிஎஸ்.

-அருள் திலீபன்

You'r reading நெருங்குது தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு.. குலைநடுக்கத்தில் ஓபிஎஸ்.. டெல்லிக்கு தூது மேல் தூது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் மீது பாசம் காட்டிய மோடி- குஷியில் பாஜக தலைகள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்