என்னது புலிகளின் கப்பலை காப்பாற்றினாரா? புலிகளை அழிக்க இந்திய கப்பலை விற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்? வைகோவின் இரங்கலை முன்வைத்து புது சர்ச்சை

Controversy over Viakos Condolence Message for George Fernandes

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையை முன்வைத்து புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

வைகோ தமது இரங்கல் அறிக்கையில், விடுதலைப் புலிகளுக்குச் சென்ற கப்பலை சர்வதேச கடலில் இந்தியக் கடற்படை தடுக்க முயன்றதை பெர்ணான்டஸ் கவனத்துக்குக் கொண்டுசென்ற உடன் அவரும், பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அதன்பின் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனர்.

வைகோ குறிப்பிட்ட இச்சம்பவம் ஊடகங்களில் இடம்பெறாத ஒன்று. வைகோவின் ராஜதந்திர நடவடிக்கைகளில் இது ஒன்றாக திரைமறைவு நடவடிக்கையாக இருக்கலாம்.

அதே நேரத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த காலத்தில்தான் சரயூ என்கிற போர்க்கப்பலை இலங்கைக்கு இந்திய கடற்படை வெளிப்படையாக விற்பனை செய்தது. இதை அன்று வைகோ தடுக்க முயற்சிக்கவே இல்லை என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்த் தேசிய வட்டாரங்களில் விசாரித்த போது, இலங்கைக்கு 2 கப்பல்களை இந்தியா விற்பனை செய்கிறது என்கிற தகவலை முதன் முதலில் பிபிசி தமிழோசை வானொலி வெளியிட்டது. தமிழோசை வானொலியில் செய்தி ஒலிபரப்பான உடனேயே இது வைகோவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

வைகோவும் பெர்னாண்டஸிடம் பேசுவதாக கூறினார். பின்னர் அப்படியான சம்பவம் எதுவும் இல்லை என பெர்னாண்டஸ் கூறிவிட்டார் என வைகோ தெரிவித்தார். வைகோவுக்கு தகவல் தெரிவித்தவர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்கின்றனர். வைகோவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட விவகாரம் ஒருபுறம் இருக்க 2001-ம் ஆண்டு இந்து பத்திரிகையில் நிருபமா சுப்பிரமணியன் பகிரங்கமாக, 2000-ம் ஆண்டு இலங்கைக்கு போர்க்கப்பலை இந்தியா விற்பனை செய்திருப்பதை எழுதியிருக்கிறார்.

புலிகளை அழிக்கும் நாசகார போர்க்கப்பலை விற்பனை செய்தபோது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்கிற உண்மையை மறைக்க புலிகளின் கப்பலை காப்பாற்றினார் என வைகோ குறிப்பிட்டிருக்கிறாரோ? என்கிற சந்தேகத்தையும் தமிழ்த் தேசிய வட்டாரங்கள் எழுப்புகின்றன.

இந்து நாளேட்டு செய்தி:

You'r reading என்னது புலிகளின் கப்பலை காப்பாற்றினாரா? புலிகளை அழிக்க இந்திய கப்பலை விற்றவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்? வைகோவின் இரங்கலை முன்வைத்து புது சர்ச்சை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 95% பேர் பணிக்குத் திரும்பியதாக அரசு பொய் சொல்கிறது - ஜாக்டோ-ஜியோ குற்றச்சாட்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்