உடம்பில் ஓடுவது வன்னியர் ரத்தம்னா ராமதாஸை வெட்டுங்கடா... வைரலாகும் காடுவெட்டி குரு சகோதரியின் ஆவேச வீடியோ- கொந்தளிக்கும் பாமக

Kaduvetti Guru Sister angry over Ramadoss Video goes viral in Social media

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டிவின் பிறந்த நாளை முன்வைத்து வடதமிழகத்தில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் “உங்க உடம்பில் ஓடுவது வன்னியர் ரத்தம்னா ராமதாஸை வெட்டுங்கடா... ” என போலீசார் முன்னிலையில் காடுவெட்டி குரு சகோதரி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது.

காடுவெட்டி குரு காலமானது முதல் பாட்டாளி மக்கள் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காடுவெட்டி குருவின் தாயார், மகன் ஆகியோர் ராமதாஸுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேபோல் காடுவெட்டி குருவின் உறவினரான வழுவூர் மணி பாமகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது வழுவூர் மணி தலைமையில் வன்னிய இளைஞர்கள் அணி திரண்டுள்ளனர். குருவின் பிறந்த நாளான நேற்று வழுவூர் மணி, காடுவெட்டி கிராமத்துக்குல் நுழையவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

வழுவூர் மணி பாசறை, டெல்டா தளபதி வழுவூர் மணி என அவரது பெயரில் புதிய அமைப்புகள் உருவாக தொடங்கிவிட்டன. இந்நிலையில் காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸை ஒருமையில் விமர்சித்து அவரை கொலை செய்ய வேண்டும் என இளைஞர்களை தூண்டிவிடும் காடுவெட்டி குரு சகோதரி என குறிப்பிடப்படுவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. ராமதாஸை விமர்சிக்கும் பெண்ணை கைது செய்ய வேண்டும் எனவும் பாமகவின் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You'r reading உடம்பில் ஓடுவது வன்னியர் ரத்தம்னா ராமதாஸை வெட்டுங்கடா... வைரலாகும் காடுவெட்டி குரு சகோதரியின் ஆவேச வீடியோ- கொந்தளிக்கும் பாமக Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - என் அப்பாவை கொலை செய்துவிட்டார்கள்... புதிய வன்னியர் சங்கம் உருவாகும்... அனல் கக்கும் ‘சின்னகாடுவெட்டியார்’ கனலரசன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்