மதுக்கடையை மூடினாத்தான் உங்களுக்கு ஓட்டு - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை அதிர வைத்த பெண்மணி!

Lady questions Stalin about liquor shop closing.

மதுக்கடைகளை எப்பத்தான் மூடப் போறீங்க? என்று மு.க.ஸ்டாலின் நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் கிராமத்துப் பெண் அப்பாவியாக கேள்வி கேட்டு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது திமுக. மாவட்டம் தோறும் சில குறிப்பிட்ட கிராமங்களை தேர்வு செய்து மு.க.ஸ்டாலினும் மக்களோடு அமர்ந்து குறைகளை கேட்டு வருகிறார்.

இன்று காலை சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார். தமிழர்களின் அடையாளமாகத் திகழ்கிறது கீழடி. இந்த ஊர் அடங்கியுள்ள மானாமதுரை உள்ளிட்ட 18 தொகுதிகள் வீணாக காலியாக உள்ளது. அதிமுக அரசு மக்கள் பிரச்னைகளில் கவனம் கொள்ளாத அரசாக இருக்கிறது என்றெல்லாம் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது லட்சுமி என்ற பெண் திடீரென மைக் பிடித்து, முதல்ல மதுக்கடைகளை எப்போ மூடப் போறீங்க... எங்களுக்கு வீடு, வாசல் கூட தேவையில்லை... மதுக்கடைகள் தான் பிரச்னை.... நீங்களும் மூடாவிட்டால் ஓட்டுப் போடமாட்டோம் என்றவுடன் பிற
பெண்கள் கைதட்டி ஆமோதித்தனர். இதனால் கிராம சபைக் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

You'r reading மதுக்கடையை மூடினாத்தான் உங்களுக்கு ஓட்டு - கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலினை அதிர வைத்த பெண்மணி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 78 ஆண்டு கனவு நிறைவேறுகிறது! தருமபுரி- மொரப்பூர் இடையே புதிய ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்