திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை விரட்டிவிடுங்க...ஸ்டாலினுக்கு மா.செ.க்கள் கடிதம்

DMK Seniors oppose to VCK in alliance

திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியேற்ற வலியுறுத்தி அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லோக்சபா தேர்தலுக்கான திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. ஆனால் விடுதலை சிறுத்தைகளை கழற்றிவிட்டு பாமகவை உள்ளே கொண்டு வர வடமாவட்ட திமுக சீனியர்கள் படாதபாடுகின்றனர்.

விடுதலை சிறுத்தைகளுக்கு சிதம்பரம் தொகுதி மட்டும் கொடுக்கலாம்; அதை ஏற்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்ளட்டும் என்பதும் அந்த சீனியர்களின் பக்கா ப்ளான். இந்த நிலையில் கூட்டணிக்கு கட்சி கிடைக்காத தினகரனும் விடுதலை சிறுத்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறார்.

இதனிடையே டிவி சேனல் பேட்டி ஒன்றில், லோக்சபா தேர்தலுக்குப் பின் பாஜகவை திமுக ஆதரிக்காது என தம்மால் உத்தரவாதம் தர முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார். இது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதான் வாய்ப்பு என காத்திருந்த திமுக சீனியர்கள், விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றுங்கள் என ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக மாவட்ட செயலாளர்கள் கடிதங்களை ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்பது பர்சேஸிங் பார்ட்டி... கடைசி நேரத்தில் பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களித்துவிடுவார்கள்.. அதனால் திமுகவுக்கு இழப்புதான் ஏற்படும் என்கிற கருத்தை முன்வைத்து அக்கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-எழில் பிரதீபன்

You'r reading திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை விரட்டிவிடுங்க...ஸ்டாலினுக்கு மா.செ.க்கள் கடிதம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ருசியான ஆம்லெட் குருமா ரெசிபி! (வீடியோ)

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்