பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு- தம்பிதுரைக்கு ஆதரவாக 5 அமைச்சர்கள்- மீண்டும் உடையும் அதிமுக!

AIADMK to face one more Spilit

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிர் நிலைப்பாட்டில் இருக்கிறார் தம்பிதுரை. அவருடைய கருத்தை அன்வர்ராஜா உள்பட அனைத்து எம்பிக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

பன்னீர்செல்வம், மாஃபா.பாண்டியராஜன் உட்பட ஒரு சிலர் மோடி ஆதரவு பாசத்தைக் காட்டுகின்றனர். இதனால் அதிமுகவே இரண்டாக உடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் சீட் கேட்டு சிட்டிங் எம்பிக்கள் பலரும் மனு கொடுத்துள்ளனர். இவர்களது அச்சமே, பாஜக கூட்டணி அமைந்தால் தோற்றுவிடுவோம் என்பதுதான். அதனால்தான் ஜெயலலிதா பாணியில் செயல்படுவோம் என எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தகவல் அனுப்பி வருகின்றனர்.

இதையெல்லாம் கேட்கும் நிலையில் பன்னீர்செல்வம் இல்லையாம். இதனால் பலரும் தம்பிதுரை வழியில் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.

வேலூர் கே.சி.வீரமணி, கடலூர் எம்.சி சம்பத் உட்பட 5 அமைச்சர்கள் தம்பிதுரை கருத்தை ஆதரிக்கின்றனர்.

இவர்கள் எல்லோரும் ஓரணியில் திரளுவதற்கான சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக நடந்த விவாதத்தில், ' மிகவும் கஷ்டப்பட்டு 37 எம்பிக்களை ஜெயிக்க வைத்தார் அம்மா. அப்போது உடல் நலிவோடு இருந்தார். இருந்தாலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஊர் ஊராகப் பிரசாரம் செய்து இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

அம்மா மறைவுக்குப் பிறகு மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள். சசிகலாவுக்கு எதிரான முடிவு என்பதால் அமைதியாக இருந்தோம். நம்மை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்றால் பாஜக கூட்டணிக்கு நோ சொல்வதுதான் ஒரே வழி' எனப் பேசியுள்ளனர். ஆனால், கட்சிக்கு நான்தான் என்பதைக் காட்டும் நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறார் ஓபிஎஸ்.

எழில் பிரதீபன்

You'r reading பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு- தம்பிதுரைக்கு ஆதரவாக 5 அமைச்சர்கள்- மீண்டும் உடையும் அதிமுக! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதிமுகவுக்கு ராமதாஸ் தேவையா? போர்க்கொடி தூக்கும் வடமாவட்ட மா.செக்கள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்