அதிமுக அணி: வேலூரில் ஏ.சி.சண்முகம்.. கடும் அதிருப்தியில் ரத்தத்தின் ரத்தங்கள்

Vellore AIDMK Cadres oppose to Puthiya Neethi Katchi in alliance

அதிமுக அணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்பட மேலும் சில சிறிய கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் அதிமுக தலைமையில் உள்ளவர்கள். திமுகவைவிடவும் இந்த அணியை பிரமாண்டமாகக் காட்டுவதில் ஆர்வமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்தக் கூட்டணிக்குள் புதிய நீதிக்கட்சியும் இணைய இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட இருக்கிறதாம். இதனால் உள்ளூர் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

இதைப் பற்றிக் கட்சித் தலைமையிடம் பேசியவர்கள், சீட்டை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பது தலைமை எடுக்கக் கூடிய முடிவு. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால் கடந்த முறை ஏசிஎஸ்ஸை எதிர்த்து நாங்கள் தேர்தல் வேலை செய்தோம்.

இந்தமுறை அவருக்காக ஓட்டுக் கேட்டுப் போனால் மக்கள் மனநிலை என்னவாக இருக்கும். அதையும் ஆராய்ந்து பார்த்து சீட்டை ஒதுக்கினால் பரவாயில்லை' என எடுத்துக் கூறியுள்ளனர். ஆனாலும், வேலூரை ஏசிஎஸ்ஸுக்கு ஒதுக்குவதில் உறுதியாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

You'r reading அதிமுக அணி: வேலூரில் ஏ.சி.சண்முகம்.. கடும் அதிருப்தியில் ரத்தத்தின் ரத்தங்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பழைய பகையில் துரைமுருகன்! ஆதங்கத்தைக் கொட்டிய திருமாவளவன் !!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்