விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு!

Thirunavukkarasar meets Vijayakanth

தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தை தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் திடீரென இன்று சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசரை தூக்கி அடிப்பதில் முனைப்பு காட்டியது திமுக. காங்கிரஸ் மேலிடமும் அதை ஏற்று திருநாவுக்கரசரை ஓரம்கட்டியது.

ஆனால் திருநாவுக்கரசரோ ரஜினிகாந்தையும் திருமாவளவனையும் சந்தித்து அரசியல் யூகங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டார்,. தினகரனுடன் அணி சேருவதில் திருநாவுக்கரசர் முனைப்பு காட்டுவதாகவே கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிமுக-பாஜக அணியில் அதிக தொகுதிகளை கேட்டு அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது தேமுதிக. இதனால் தேமுதிக என்ன முடிவெடுக்கக் கூடும் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே இன்று விஜயகாந்தை திடீரென திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரித்ததாகவே திருநாவுக்கரசர் தரப்பு கூறுகிறது.

ஆனால் திடீர் திடீரென பரபரப்பை கிளப்பும் திருநாவுக்கரசரின் சந்திப்புகளுக்கு பின்னால் முக்கிய காரணம் இருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

You'r reading விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 10 தொகுதி, 2 ராஜ்யசபா சீட்... பிடிகொடுக்காமல் அடம்பிடிக்கும் தேமுதிக- விழிபிதுங்கும் அதிமுக-பாஜக!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்