திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதி - இன்று மாலைக்குள் அறிவிப்பு

Loksabha election seat share, Dmk alliance discuss today

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 மக்களவைத் தொகுதிகளில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய ஜனநாயக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளிலும் எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி ஒதுக்குவது என்பது குறித்து சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினருடன் கூட்டணிக் கட்சிகளின் குழுவினர் இன்று கூடி விவாதிக்கின்றனர். இன்று மாலைக்குள் தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது.

You'r reading திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதி - இன்று மாலைக்குள் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொந்த ஊரில் தோனி விளையாடும் கடைசிப் போட்டி - ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்