சித்திரை திருவிழா- விவரங்களைத் தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு

EC seeks Details of Madurai chithirai Thiruvizha

மதுரை சித்திரை திருவிழா தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அம்மாவட்ட ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. அதே நாளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ந் தேதி மதுரையில் சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதனால் வேறு ஒரு தேதியில் தேர்தலை மாற்றி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனை விசாரித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, மதுரை சித்திரைத் திருவிழா தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் சித்திரை திருவிழா நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதா? என்கிற விவரமும் கேட்கப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களை நாளைக்குள் மதுரை ஆட்சியர் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

You'r reading சித்திரை திருவிழா- விவரங்களைத் தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு தேர்தல் அதிகாரி உத்தரவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இரட்டை இலைச் சின்னம் வழக்கு - தினகரனின் மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்