சித்திரை திருவிழா... தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்: வைகோ

Vaiko urges to change Poll date in TN

தமிழகத்தில் ஏப்ரல் 18-ல் தேர்தல் நடைபெறுவதை மாற்றி வைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:

வழக்குகள் நிலுவையில் இருக்கிறபோது இடைத்தேர்தல்கள் நடந்த முன்னுதாரணம் இருக்கின்றன. தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவதை தள்ளிப்போடுவது ஏற்புடையது அல்ல.

மதுரை சித்திரை திருவிழாவில் பல லட்சம் பேர் பங்கேற்ப்ர். ஆகையால் ஏப்ரல் 18-ந் தேதி தமிழகத்தில் தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் நடத்த கோரும் கோரிக்கை நியாயமானது.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும். மத்தியில் பாஜக கூட்டணி படு தோல்வி அடையும்.

பொள்ளாச்சி சம்பவத்துக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். கடந்த சில நாட்களாக கர்நாடகாவின் எடியூரப்பா பேசிவருவது கடும் கண்டனத்துக்குரியது.

இவ்வாறு வைகோ கூறினார்.

You'r reading சித்திரை திருவிழா... தமிழகத்தில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும்: வைகோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டெல்லியில் இருந்து தமிழக அரசை இயக்குவது தமிழகத்தை அவமதிப்பது- ராகுல் சுளீர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்