பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி

Election 2019, BJP announces candidates for Tamil nadu

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் குமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராம நாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் இழுபறி நீடித்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று தன்னிச்சையாக யார்? யார்? போட்டி என்பதை அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இன்று மாலை 5 தொகு தி க ளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.வேட்பாளர்கள் விபரம்m

தூத்துக்குடி : தமிழிசை சவுந்திரராஜன்

கன்னியாகுமரி : பொன்.ராதா கிருஷ்ணன் சிவகங்கை: எச்.ராஜா

ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன் கோவை :சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பட்டியலைத்தான் எச்.ராஜாவும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தூத்துக்குடியில் தமிழிசை, சிவகங்கையில் எச்.ராஜா போட்டி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பாகிஸ்தானியரை விட மகிழ்ச்சியான வாழ்க்கையில் பின்தங்கிய இந்தியர்கள் - ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்