என்.ஆர்.ஐ., மாணவர் சேர்க்கை தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

NRI admission open for anna university

அண்ணா பல்கலைக்கழகத்தில், வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள பொறியியல் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பதிவு தொடங்கியுள்ளது.

வெளிநாடுவாழ் இந்தியர், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள், வெளிநாட்டினரின் ஒதுக்கீட்டில் உள்ள சிறப்பு பிரிவினர் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், கட்டிடக்கலை கல்லூரி (எம்.ஆர்க். படிப்பு மட்டும்),  குரோம்பேட்டை எம்ஐடி, திருச்சி பிஐடிவளாகம் ஆகியவற்றில் உள்ள இடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் 1-ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஜூன் 7-ம் தேதிக்குள்  ஆன்லைனில் (www.annauniv.edu/cir) விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டினருக்கான கலந்தாய்வு ஜூன் 17-ம் தேதியும், வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இந்திய தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 18-ம் தேதியும் நடைபெறும்.

You'r reading என்.ஆர்.ஐ., மாணவர் சேர்க்கை தொடக்கம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடந்து சென்று வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின் - வியாபாரிகள், பயணிகளிடம் ஆதரவு திரட்டினார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்