கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்த ஆட்களுக்கு காசு தரல வாய்த்தகராறு சண்டையில் முடிந்ததால் தேமுதிக நகரச் செயலாளர் அதிரடி கைது

DMDK member arrest on Nagapatinam

மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார்.

இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று நடைபெற்ற தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் கேப்டன் மன்றச் செயலாளர் சேகர் மற்றும் நகரச் செயலாளர் செந்தில் என்பவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு அடிதடி சண்டையாக உருவெடுத்த நிலையில், கேப்டன் மன்றச் செயலாளர் சேகரை பயங்கரமாகத் தாக்கியதாக நகரச் செயலாளர் செந்தில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டார்.

சீர்காழி மற்றும் நாகையில் பிரசாரம் செய்ய தேமுதிக பொருளாளர் வருவதை முன்னிட்டு, திருமண மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டத்துக்கு கூட்டி வந்த ஆட்களுக்கு காசு கொடுக்காமல் சேகர் ஏமாற்றியதாக செந்தில் குற்றஞ்சாட்டவே இந்த அடிதடி சண்டை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர் எதிர் கட்சியினரிடையே தேர்தல் பிரசாரத்தின் போது சண்டை ஏற்படுவதை கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், தேமுதிகவில் அந்த கட்சியை சேர்ந்தவர்களே அடித்துக் கொண்டும் அந்த கட்சிக் காரர்களையே கைது செய்வது போன்ற அலப்பறைகள் தேர்தல் நேரத்தில் சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளது.

முன்னதாக புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உளறிய விடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

You'r reading கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்த ஆட்களுக்கு காசு தரல வாய்த்தகராறு சண்டையில் முடிந்ததால் தேமுதிக நகரச் செயலாளர் அதிரடி கைது Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அதே பெயர்..., சின்னமோ குக்கர்...தினகரனை திட்டமிட்டு பழிவாங்கிய அதிமுக

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்