அமமுக நகர செயலாளர் சுந்தரவேல் கார் விபத்தில் உயிரிழப்பு

TTV Dinakaran Party member died in car accident

டிடிவி தினகரனின் அமமுக நகர செயலாளரும் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.,வும் ஆன சுந்தரவேல் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார்.

ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் வழியில் வேகமாக சென்ற சுந்தரவேலின் கார் முன்னாள் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோடியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுந்தரவேல் அவரது மனைவி உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக அங்கு விரைந்த ஆம்புலன்ஸ் அவர்களது உடலை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளது.

உயிரிழந்த சுந்தரவேல் 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பின்னர் டிடிவி தினகரன் தொடங்கிய அமமுகவில் இணைந்த அவர், திருப்பத்தூர் அமமுக நகர செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த சுந்தரவேல் விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்த டிடிவி தினகரன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

You'r reading அமமுக நகர செயலாளர் சுந்தரவேல் கார் விபத்தில் உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ''பாவத்தை ஓப்புக் கொண்டு இருவருக்கு மரணத் தண்டனை அளித்துவிட்டேன்!''- காதலியை கொன்ற இமானுல்லா உருக்கமான கடிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்