வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? அறிந்து கொள்ள ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்!

Ec plans to voters get their booth details via sms

இந்தியாவின் அடுத்த பிரதமர் மற்றும் மந்திரி சபை தேர்வு செய்யும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி நாடு முழுவதும் 7 கட்டங்களாக துவங்குகிறது. தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வரும் நிலையில், பலருக்கு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்பதே தெரியாது என்பது தான் நிதர்சனம்.

இந்த நிலைமையை சரி செய்ய நினைத்த தேர்தல் ஆணையம் ஒரே ஒரு எஸ்எம்எஸ் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? உங்களுக்கு எந்த வாக்குச்சாவடி உள்ளிட்ட தகவலை அனுப்பும் ஏற்பாடை செய்துள்ளது.

1950 என்ற எண்ணுக்கு எனப் டைப் செய்து ஒரு space விட்டு உங்களுடைய வாக்காளர் அட்டை எண்ணை டைப் செய்து அனுப்பினால் உங்களுடைய விவரங்கள் குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக உங்கள் மொபைலுக்கு வந்து சேரும்.

வரும் மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குகளை பதிய வைப்பதை தேர்தல் ஆணையம் குறிக்கோளாக கொண்டுள்ளது. இதன் காரணமாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தேர்தல் ஆணையம் முன்னமே சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

You'r reading வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? அறிந்து கொள்ள ஒரே ஒரு எஸ்எம்எஸ் போதும்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’தளபதி 63’க்காக தயாராகி வரும் பிரம்மாண்ட செட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்