ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை: திமுக ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக திமுக நேற்று ரூ.1 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பழமையான மொழிகளுக்கு இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ் மொழக்கு இருக்கை இல்லாததால், இருக்கை அமைக்க அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இதில், தமிழ் ஆர்வலர்கள், அமைப்புகள் என மொத்தம் 42 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளன. இதேபோல், தமிழக அரசு மற்றும் கவிஞர் வைரமுத்து உள்பட திரையுலக பிரபலங்களும் தமிழ் இருக்கைக்காக நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து, திராடவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழ் இருக்கைக்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த நிதியுதவியானது தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும். தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்நர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும்.

உயர் நீதிமன்றம், மத்திய அரசின் அலுவலகங்களில் நிச்சயம் ஒரு நாள் தமிழ் அரியணை ஏறியே தீரும். தமிழ் இருக்கை விரைவில் அமைந்து தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவ செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You'r reading ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை: திமுக ரூ.1 கோடி நிதியுதவி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மசூர் பருப்பு விநியோகம் நிறுத்தம்... தமிழக உணவுத்துறை முடிவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்