மின்வெட்டு காரணம் இல்லையாம்.. மாரடைப்பால் தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாம் பீலா ராஜேஷ் அசால்ட் விளக்கம்

Power cut not an issue Heart attack was the reason for patients dead in Madurai Govt Hospital

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மின்வெட்டு காரணத்தால் 5பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது, உயிரிழந்தது மூன்று பேர் மட்டுமே என்றும், அவர்கள் மூவரும் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

மதுரையில் நேற்று பெய்த திடீர் மழையால், அந்த பகுதி முழுவதும் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. இரண்டு மணி நேரமாக மின்சாரம் வரவில்லை என மக்கள் தெரிவித்த நிலையில், ஒரு மணி நேரம் தான் மருத்துவமனையில் பவர் கட் என்றும், ஜெனரேட்டர் பழுது காரணத்தால் செயல்படவில்லை என்றும் மருத்துவமனை டீன் வனிதா கூறினார்.

ஆனால், மின்வெட்டு காரணமாக மேலூர் பூஞ்சுத்தி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (55), திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த பழனியம்மாள் (60), விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரவீந்திரன் (52) ஆகிய 3 பேரும் உயிரிழக்கவில்லை என்றும், மாரடைப்பு காரணமாகவே அவர்கள் மூவரும் உயிரிழந்தனர் என தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் விளக்கமளித்துள்ளார்.

அரசு மற்றும் அரசு மருத்துவமனையின் மெத்தனப் போக்கை மறைக்கவே இப்படியொரு பொய்யான விளக்கத்தை அரசு தரப்பில் இருந்து கூறுவதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கொந்தளித்துள்ளனர்.

You'r reading மின்வெட்டு காரணம் இல்லையாம்.. மாரடைப்பால் தான் உயிரிழப்பு நிகழ்ந்ததாம் பீலா ராஜேஷ் அசால்ட் விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஈரோடு முதலிடம்.. வேலூர் கடைசி இடம்.. இது பிளஸ் 1 தேர்ச்சி ரிசல்ட்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்