நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்

Neet exam results will be released tommorow

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன்5) வெளியாகிறது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளி்ல் மாணவர்களை சேர்ப்பதற்காக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(நீட்) நடத்தப்படுகிறது. கடந்த மே 5, மே 20ம் தேதிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். கடந்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்கள் 4பேரும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 26 பேருமாக மொத்தமே 30 அரசு பள்ளி மாணவர்களே தேர்ச்சி பெற்றனர் பெரும்பாலும் மத்திய பாடத் திட்டம் பயின்ற மாணவர்களே நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, 4 ஆயிரம் அரசு பள்ளி மாணவர்களக்கு நீட் தேர்வுக்கான பயற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, அவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். எனவே, இந்த ஆண்டு அதிகமான அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதுரை கலெக்டர் திடீர் மாற்றம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்