நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வேட்பாளர்கள்

Vishal team canditates contesting actors union election announced

நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தென்னிந்திய நடிகர்சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 7ம் தேதி தொடங்குகிறது. 10ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம். தேர்தல் அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.-ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்.

கடந்த தேர்தலில் வென்ற விஷால் அணி இந்த தேர்தலிலும் போட்டியிடுகிறது. தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சிமுருகன் போட்டியிடுகின்றனர்.

செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு குஷ்பு, லதா, குட்டி பத்மினி, கோவை சரளா, அகல்ரத்னா, ஸ்ரீமன், ரமணி, பசுபதி, நந்தா, தினேஷ், சோனியா போஸ், பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், நிதின் சத்யா, பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

You'r reading நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வேட்பாளர்கள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எந்திர வேகத்திலேயே காணாமல் போவார்கள்; மம்தா ஆவேசம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்