10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம்

TN government introduces New syllabus system for 10, 11, 12 class school students:

10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறையில் அதிரடி மாற்றம் செய்துள்ளது தமிழக அரசு . இந்த மாற்றம் நடப்பு ஆண்டிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதன்படி 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடத்திலிருந்து 5 பாடமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்கள் இனிமேல் கணிதப் பாடம் படிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல் வேதியியல், உயிரியல் பாடம் மட்டுமே இருக்கும். இதனால் மொத்த மதிப்பெண்ணும் 600-ல் இருந்து 500 ஆக குறைக்கப்படுகிறது.

இதே போன்று பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இனி மேல் உயிரியல் பாடம் படிக்க வேண்டியதில்லை. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்கள் மட்டுமே நடத்தப்படும்.மொத்த மதிப்பெண்ணும் 500 தான்.

இதே போன்று 10-ம் வகுப்பு தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்வு தாள்1, தாள் 2 என இருக்காது. ஒரே தேர்வு மட்டும் நடத்தப்படும் என்றும், இந்த புதிய கல்வித்திட்டம் இந்த ஆண்டே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

'தவறாக சுற்றறிக்கை வெளியாகி விட்டதாம்' தமிழுக்கு எதிரான ரயில்வே உத்தரவு ஒரே நாளில் வாபஸ்

You'r reading 10,11,12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு ... தேர்வு முறையிலும் மாற்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மக்களவை புதிய சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வாகிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்