ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி..! செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல்

Avadi municipality admk cadres attack journalists

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி பெரு நகராட்சியை இன்று தமிழக அரசு மாநகராட்சியாக அறிவித்து அரசானை வெளியிட்டது.

இதனை அடுத்து ஆவடி பெரு நகராட்சி அலுவலகத்தில் செய்தி சேகரிப்பதற்காக பல்வேறு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த கல்பனா என்ற பெண் ஆவடி பெருநகராட்ச்சியில் தண்ணீர் விநியோகம் செய்வது தொடர்பாக 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான டெண்டரில் முறைகேடு நடப்பதாக செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் செய்தி சேகரித்து கொண்டு இருந்த போது அங்கிருந்த அதிமுகவினர் செய்தியாளர்களை தாக்கினர். இதனை படம்பிடிக்க முயன்றபோது தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரின் கைபேசியை அதிமுக முன்னாள் ஆவடி நகர செயலாளர் கே.எஸ்.சுல்தான் பிடுங்கி உடைத்தார்.மேலும் அனைத்து செய்தியாளர்களையும் தகாத வார்த்தையில் பேசி தாக்கினார்.இதனை படம் பிடித்து கொண்டு இருந்த தினசரி பத்திரிக்கையாளரின் கேமிராவை பிடுங்கி அதிலிருந்த புகைப்படத்தை டெலிட் செய்தனர்.

இதனை அடுத்து அங்கிருந்த ஒருசில அதிமுகவினர் அவர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனிடையே ஆவடி பெரு நகராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக நடைபெற்ற டெண்டரில் முறைகேடு நடப்பதாக கூரிய கல்பனா கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் டெண்டர் எடுத்து வருவதாவும் இன்று நடைபெற்ற டெண்டரில் எங்களை ஒப்பந்த விலைப்பட்டியல் வழங்கவிடாமல் நகராட்சி ஊழியர்கள் தடுத்ததாக புகார் தெரிவித்தனர் .

மேலும் காலை 11 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஒப்பந்த விலைப்பட்டியக் வழங்க கால அவகாசம் இருந்தும் காலை 11 மணிக்கு விலைப்பட்டியல் வழங்க வந்த தன்னை பல மணி நேரம் காக்க வைத்து 1 மணிக்கே டெண்டரை முடித்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியதாக தெரிவித்த அவர் அங்கிருந்தவர்கள் தன்னை கொலை மிரட்டல் செய்ததாக புகார் கூறியுள்ளார்.

'தண்ணீர் பிரச்னைக்கு 20 வருடம் முன்பே தீர்வு சொன்னேன்... யாரும் கேட்கல

You'r reading ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் அடிதடி..! செய்தியாளர்கள் மீது அதிமுகவினர் தாக்குதல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - டிக் டாக் வீடியோவால் மரணப்படுக்கைக்கு சென்ற இளைஞர்..! கர்நாடகாவில் நடந்த பரிதாப நிகழ்வு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்