குயின்ஸ்லாண்ட் தீம் பார்க்கை இயக்கத்தடை..! காவல்துறை கறார்

Queensland theme park seal

சென்னையின் புறநகரான பூவிருந்தவல்லியை அடுத்த பாப்பான்சத்திரத்தில் இயங்கி வருகிறது குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்கா. இந்த பூங்காவை மறு உத்தரவு பெறும்வரை இயக்க கூடாது என காவல்துறை கறாராக நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டது.

கடந்த செவ்வாய்கிழமை அன்று, FREE BALL என்ற ராட்சத ராண்டினத்தில் 12 பேர் அமர்ந்து விளையாடி கொண்டு இருந்த போது, ராட்டினம் அறுந்து விழுந்தது. இதில் லேசான காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.

இதனை அடுத்து குயின்ஸ்லாண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள விளையாட்டு சாதனங்கள், ராட்டினங்களை இயக்க கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.மீண்டும் இயக்க அங்குள்ள உபகரணங்களுக்கு stability certificate பெற வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது.

இதனால் விடுமுறை தினங்களை கழிக்க குயின்ஸ்லாண்ட் தீம் பார்க்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.

-தமிழ் 

You'r reading குயின்ஸ்லாண்ட் தீம் பார்க்கை இயக்கத்தடை..! காவல்துறை கறார் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தெலுங்கானா : தர்ஹாவிற்கு சென்று திரும்பிய 4 பேர் விபத்தில் சிக்கி பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்