தங்கம் விலை கிடுகிடு 2 நாளில் ரூ.1000 உயர்வு

gold price rised Rs.1000 per sovereign in 2 days

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சவரன் விலை தற்போது 26 ஆயிரத்து 168 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த சில மாதங்களில் தங்கம் விலை வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ528 உயர்ந்து விலை 25 ஆயிரத்து 704 ஆக இருந்தது. இன்று சவரனுக்கு மேலும் ரூ.464 உயர்ந்து சவரன் விலை 26 ஆயிரத்து 168 ஆகியுள்ளது.

இது வரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்தது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க வங்கியின் வட்டி குறைப்பு மற்றும் பொருளாதார நிலை போன்ற காரணங்களாலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது’’ என்றனர்.

You'r reading தங்கம் விலை கிடுகிடு 2 நாளில் ரூ.1000 உயர்வு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை..! 'தமிழ்புலிகள்' அமைப்பின் நிர்வாகி போக்ஸோவில் கைது

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்