மதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் சென்னை போலீஸ்

Drunken persons attack on chennai police

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கலைஞர் பூங்கா எதிரே குடிபோதையில் 20 க்கும் மேற்பட்டோர் சேர்ந்து ஒருவரை தாக்குவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இரவு பணியில் இருந்த புளியந்தோப்பு சரக உதவி ஆய்வாளர்கள் சஜிபா, ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்போது அனைவரும் சிதறி ஓட, அங்கிருந்தவர்களிடம் உதவி ஆய்வாளர் ஆனந்த் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது குடிபோதை மயக்கத்தில் இருந்த ஓட்டேரியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ், ஜானகிராமன், ஜகதீஸ் குமார் ஆகிய மூவரும் உதவி ஆய்வாளர் ஆனந்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினர். இதை தடுக்க முற்பட்ட மற்றொரு பெண் உதவி ஆய்வாளர் சஜிபா அவர்களை தடுக்க முற்பட்டார்.

இதனையடுத்து குடிபோதையில் இருந்த 3 பேரும் அவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனையடுத்து ரோந்துபணி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு மூவரையும் கைது செய்து ஓட்டேரி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறையினரை தாக்கிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீஸ் அவர்களிடம் விசாரணை செய்கிறது.

-தமிழ்

கள்ளக்காதலால் கடந்த 10 ஆண்டுகளில் 1,459 கொலைகள்..! உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்

You'r reading மதுபோதையில் போலீஸ் மீது கைவைக்கும் சம்பவம் அதிகரிப்பு..! அதிர்ச்சியில் சென்னை போலீஸ் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேச்சுரிமை என்றாலும் வரம்பின்றி பேசுவதா..? பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்