தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி..! புதிய கட்டண விவரம் வெளியீடு..!

Metric schools Fees structure announce

தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மாசிலாமணி தலைமையிலான குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளது.

www.tamilnadufeecommittee.com என்ற இணையதளத்தில் புதிய கட்டண விவரத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டண விவரத்தின் படி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகளில் ஆய்வு செய்து அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்து அரசுக்கு ஜூலை 1-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுவரை கட்டண நிர்ணயத்துக்கு விண்ணப்பிக்காத தனியார் பள்ளிகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் கட்டணத்தை நிர்ணயித்து வெளியிட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


அரசின் உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நடவடிக்கையின் விவரத்தையும் ஜூலை 1-க்குள் துறைக்கு தெரிவிக்க முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

You'r reading தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளுக்கு கிடுக்கிப்பிடி..! புதிய கட்டண விவரம் வெளியீடு..! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு..! உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை..!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்