அத்திவரதரை தரிசித்த 35 லட்சம் பக்தர்கள் சாம்பல் பச்சைப் பட்டில் காட்சி

35 lakh devotees visited kanchipuram atthivaradar

அத்திவரதரை நேற்று வரை 35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார்.

தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்ததால், கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். கடந்த வாரம், வரிசையில் காத்திருந்தவர்களில் பலர் மயக்கமடைந்தனர்.

அவர்களில் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் பின்னர், அரசு தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி பெண்கள் வருவதை தவிர்க்குமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். இதற்கிடையே, மழை காரணமாக இரண்டு நாட்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. எனினும், நேற்று வரை சுமார் 35 லட்சம் பக்தர்கள், அத்திவரதர் தரிசனம் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திவரதர் பெருவிழாவின் 27வது நாளான இன்று அத்திவரதர் சாம்பல் பச்சை நிறப் பட்டு உடுத்தி காட்சி தருகிறார். இன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அத்திவரதர் தரிசனம் காண முதியோர்கள் வர வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்

You'r reading அத்திவரதரை தரிசித்த 35 லட்சம் பக்தர்கள் சாம்பல் பச்சைப் பட்டில் காட்சி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்