திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா இன்று நடந்தது...லட்சக்கணக்கானோர் தரிசனம்...

Soorasamharam At Tiruchendur

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.
இங்கு கந்தசஷ்டி திருவிழா கடந்த 28-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலையில் ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு, உச்சிகால தீபாராதனை, சாயரட்சை தீபாராதனை நடைபெற்று வருகிறது. விழாவின் சிறப்பு நிகழ்வான சூரசம்ஹாரம், 6-ம் நாளான இன்று(சனிக்கிழமை) நடக்கிறது.
அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
மாலை 4.30 மணி அளவில் கோவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனை நடக்க.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவீதி வலம் சென்று, 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் (அதாவது கண்ணாடியில் தெரியும் சுவாமியின் பிம்பத்திற்கு அபிஷேகம்) நடைபெற்றது.
இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

You'r reading திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா இன்று நடந்தது...லட்சக்கணக்கானோர் தரிசனம்... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆசியான், பொருளாதார  மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து புறப்பட்டார் மோடி... ”தாய்” மொழியில் திருகுறள் நூல் வெளியிடுகிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்