நடிகர் கமல் ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. ஒடிசா பல்கலை. வழங்குகிறது..

odisha centurian university to confer doctorate to Kamal hasan

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அவரது கலையுலகச் சேவையைப் பாராட்டி, ஒடிசா மாநில பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

நடிகர் கமல் ஹாசன், தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். தற்போது அவர் மக்கள் நீதி மய்யம் என்று அரசியல் கட்சி தொடங்கி முழு நேர அரசியல்வாதியாகி விட்டாலும் நடிப்பு தொழிலை தொடர்கிறார்.

இந்நிலையில், அவரது கலைச்சேவையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஒடிசா மாநிலத்தின் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் முன் வந்துள்ளது. இன்று(நவ.19) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு, பட்டத்தை வழங்குகிறார்.

மேலும், ம.நீ.ம. கட்சியில் தொடங்கப்பட்டுள்ள மய்யம் திறன் மேம்பாட்டு மையத்திற்கு கிராம் தரங் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் வழங்கவும் பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக ம.நீ.ம. கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading நடிகர் கமல் ஹாசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்.. ஒடிசா பல்கலை. வழங்குகிறது.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தர்பார் 3வது நாள் டப்பிங்கில் மிரட்டல் வசனம் பேசிய ரஜினிகாந்த்... ஸ்டுடியோவுக்குள்ளும் நடிக்கிறார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்