தமிழகத்திற்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்

புதுடெல்லி: தமிழக தேர்தல் அதிகாரியாக இருந்த ராகேஷ் லக்காணி மாற்றப்பட்டு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ பொறுப்பேற்கிறார்.

தமிழகத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக ராஜேஷ் லக்காணி பொறுப்பில் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார்கள் வந்தன. ஆனால், இதற்கு லக்காணி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதைதொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை புதிய தேர்தல் அதிகாரியாக நியமிக்க பரிசீலனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய இக்குனராக இருக்கும் சத்யபிரதா சாஹூ புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ராஜேஷ் லக்காணி மத்திய அரசுப்பணிக்கு செல்ல இருப்பதாகவும், விரைவில் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ பதவி ஏற்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்திற்கு புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நகுல் நடிப்பில் 'செய்' டீசர்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்