நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேட்காத அன்புமணி..

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக சென்றுள்ள டாக்டர் அன்புமணி ராமதாஸ், 15 சதவீத நாட்களே நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார். இது வரை ஒரு கேள்வி கூட அவர் எழுப்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வருகை, முறைப்படி எழுப்பிய கேள்விகள், கலந்து கொண்ட விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள் டாக்டர் செந்தில்குமார் (தர்மபுரி), வேலுசாமி(திண்டுக்கல்), தனுஷ் குமார்(தென்காசி) ஆகியோர் மக்களவை கூடிய அனைத்து நாட்களும் சென்று வருகைப்பதிவேட்டில் 100 சதவீதம் பெற்றிருக்கிறார்கள்.

செந்தில்குமார் 22 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 48 கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அதிமுக எம்.பி. ரவீந்திரநாத், நாடாளுமன்றத்தில் 79 சதவீத வருகை புரிந்துள்ளார். 42 விவாதங்களில் பங்கேற்று 36 கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இவர் அதிமுகவின் ஒரே எம்.பி. என்பதால், இவருக்கு அதிகமான விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பு தரப்படும். திமுகவில் 24 பேர் உள்ளதால் ஒவ்வொருவருக்கும் அந்த அளவுக்கு வாய்ப்பு தரப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் பா.ம.க.வின் ஒரே உறுப்பினரான டாக்டர் அன்புமணி ராமதாஸ், மொத்தமே 15 சதவீத நாட்களே நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார். 2 விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார். ஒரு கேள்வி கூட அவர் எழுப்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வி கூட கேட்காத அன்புமணி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்.. பிரச்சாரம் இன்று ஓய்கிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்