உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. சட்டப்பஞ்சாயத்து விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது.

சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கோரி தொடர்ந்து போராடி வந்த சட்டப்பஞ்சாயத்து இயக்கம், இப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி பொதுநல வழக்கு தொடுத்துள்ளது. இதற்கு காரணம் என்ன?

1. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டால் அதில் அதிக இடங்களை வென்றுள்ள கட்சிக்கு வாக்களிக்கவே நகர்ப்புற வாக்காளர்கள் விரும்புவார்கள். இது தேர்தல்களின் அடிப்படையான "சமதள வாய்ப்பு" என்பதைத் தகர்க்கிறது.

2.அரசியல் காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்காமலேயே போய்விடக் கூடும். எனவே, இந்த பொதுநலன் வழக்கு மூலம் தேர்தல் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுத்து, விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்க வைப்பதற்குத்தான்.

3. நீதிபதிகள் மனது வைத்தால், தேர்தல் ஆணையம் எப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்பது குறித்து எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை வாங்க முடியும். நீதிபதிகள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

4. உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே( டிச.3) நகர்ப்புற தேர்தல் முடியாதவரை ஊரக முடிவுகளை வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் விரிவான மனு அனுப்பி இருந்தது.

5. விளைவுகள் எதுவாக இருந்தாலும், முயற்சிகள் முக்கியம் என்பதே சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் போக்கு. அதன்படியே இந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறோம்.
இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.

You'r reading உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. சட்டப்பஞ்சாயத்து விளக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சொந்த வார்டில் அதிக வாக்கு பெற முடியாத எடப்பாடி பழனிசாமி.. இந்த ஆண்டின் மிகப் பெரிய ஜோக்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்