தமிழகத்தில் இதுவரை 29 பேருக்கு கொரோனா பாதிப்பு..

corona spread to 29 persons in tamilnadu.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.


தமிழகத்தில் ஏற்கனவே 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒருவா் துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த 24 வயது இளைஞா். அவர், திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், லண்டனில் இருந்து திரும்பிய 2 பேர் மற்றும் சைதாப்பேட்டையச் சேர்ந்த 65 வயது பெண் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்த 4 இந்தோனேஷியர்கள், அவர்களது வழிகாட்டி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்துடன் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வந்த 86,644 பேரை தனிமைப்படுத்திக் கண்காணிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசிடம் அறிவுறுத்தியுள்ளது. நேற்று வரை, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9,284 பேருக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 15,788 போ் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா். மருத்துவமனைகளில் மட்டும் 284 போ் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுவரை 962 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 933 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது. 29 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 77 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.

You'r reading தமிழகத்தில் இதுவரை 29 பேருக்கு கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனா நோயால் 24 ஆயிரம் பேர் பலி..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்