கொரோனா ஊரடங்கு மே 31ல் முடிவடையுமா? எடப்பாடி நாளை ஆலோசனை..

Edappadi Palanisamy will consult with medical Team tommorow.

கொரோனா ஊரடங்கை முடித்துக் கொள்வதா அல்லது நீட்டிப்பதா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கவுள்ளார்.தமிழகத்தில் இது வரை 16,277 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு, வரும் மே31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனினும், சென்னை உள்பட 12 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்டுள்ளன.


இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன் நாளை காலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவல் நிலைமை குறித்தும், ஊரடங்கை முழுமையாக விலக்கிக் கொள்வது குறித்தும், சென்னையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. இதன் பின்னர், தமிழகத்தில் மே31ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார்.

You'r reading கொரோனா ஊரடங்கு மே 31ல் முடிவடையுமா? எடப்பாடி நாளை ஆலோசனை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சென்னை, பெங்களூரில் கொரோனா தடுப்பு பணி.. மத்திய அரசு பாராட்டு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்