தமிழகத்தில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு..

covid19 cases in tamilnadu crosses to 24,000

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 24,586 ஆக உயர்ந்துள்ளது. 197 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் தினமும் புதிதாக 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூன்2) மட்டும் புதிதாக 1091 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளி மாநிலங்களில் இருந்து வந்த 55 பேரும் அடக்கம். மகாராஷ்டிராவில் இருந்து 40 பேர், கர்நாடகாவில் இருந்து 8 பேர், டெல்லி 2 பேர், கேரளா 2 பேர், டெல்லி 2 பேர் ஆந்திரா 3 பேர் என்று நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.


தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,586 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 536 பேரையும் சேர்த்து மொத்தம் 13,706 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 13 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 10,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 4 லட்சத்து 90,804 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் தினமும் 800 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 806 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 16,585 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, செங்கல்பட்டில் 82 பேருக்கும், திருவள்ளூரில் 43 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15 பேருக்கும், தூத்துக்குடியில் 31 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You'r reading தமிழகத்தில் 24,586 பேருக்கு கொரோனா பாதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இந்தியப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையும்.. பிரதமர் மோடி நம்பிக்கை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்