எதிர்கட்சி தலைவர் பொறுப்பை விட்டு முதல்வர் நாற்காலியையே பார்க்கிறார் ஸ்டாலின் - கடம்பூர் ராஜூ

மு.க.ஸ்டாலின் தனது எதிர்கட்சி பொறுப்பை சரியாக செய்யாமல் முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார் என தமிழக செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் தனது எதிர்கட்சி பொறுப்பை சரியாக செய்யாமல் முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார் என தமிழக செய்திதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, "2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் முதலமைச்சராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டார். ஆனால் மக்கள் அதை நிராகரித்துவிட்டு அவர் எதிர்கட்சி தலைவராக இருக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.

ஆனால் மு.க.ஸ்டாலின் தனது எதிர்கட்சி பொறுப்பை சரியாக செய்யாமல் எப்பொழுதும் முதலமைச்சர் நாற்காலியையே பார்த்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இடையிலேயே தமிழக முதல்வராகி விட வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார். அவரது கனவு நனவாகாது.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்றார். மானிய கோரிக்கை சட்டசபை கூட்டம் நடக்காது என்றார். ஆனால் அவைகள் அனைத்தும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது. வருகிற 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் கொடுக்கும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading எதிர்கட்சி தலைவர் பொறுப்பை விட்டு முதல்வர் நாற்காலியையே பார்க்கிறார் ஸ்டாலின் - கடம்பூர் ராஜூ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தொடரும் அட்டூழியம் - அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி மர்ம நபர்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்